கண்டியிலிருந்து கடத்திச் சென்ற 15 வயது சிறுமியை வத்தளை ஹெந்தலை பிரதேசத்தில் வைத்து 16 வயது சிறுவன் ஒருவன் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக சிறுமி ஒருவர் கண்டி
பொலிஸ் பெண்கள் பாதுகாப்புப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.
கண்டி அகஸ்ட்டாவத்த என்ற இடத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரே தான் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக முறைப்பாடு செய்துள்ளார். தற்போது இச்சிறுமி கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
15 வயது சிறுமியான என்னை கடந்த 25ஆம் திகதி 16 வயது சிறுவன் ஆசைவார்த்தைக் காட்டி கடத்திச்சென்று வத்தளை ஹெந்தலை பிரதேசத்தில் வீடொன்றில் தடுத்து வைத்து பாலியல் துஷ்பிரயோகம் புரிந்ததாகவும் தான் இந்நிலையில் அங்கிருந்து தப்பி வந்ததாகவும் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் சந்தேக நபரான 16 வயதுச் சிறுவனை கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்து:
கருத்துரையிடுக