புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஹரியானா மாநிலத்தில் சுமார் 200 அடி ஆழம் கொண்ட போர்வெல் குழாய்க்குள் விழுந்த 4 வயது சிறுமியை மீட்பு படையினர் கடும் முயற்சிக்கு பின்னர் உயிருடன் மீட்டுள்ளனர்.


ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியை சேர்ந்த அமர்ப்பூர் கிராமித்திற்கு நான்கு வயது சிறுமி ஒருவர் அவரது தாயாருடன் வந்திருந்தார்.

அமர்ப்பூர் கிராமித்தில் அவரது உறவினர் வீட்டிற்கு அருகே விளையாடிக்கொண்டிருந்த அச்சிறுமி, அங்கே திறந்திருந்த 200 அடி ஆழ்குழாய் கிணறுக்குள் தவறி விழுந்தார்.

சிறுமி காணாமல் போனதை அறிந்த பெற்றோர், அவள் ஆழ்குழாய் கிணறுக்குள் விழுந்ததை அறிந்து திடுக்கிட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட அதிகாரிகளும் மீட்புக்குழுவினர்களும் அந்த 4 வயது சிறுமியை உயிருடன் மீட்பதற்கான முயற்சிகள் எடுத்ததை அடுத்து 8 மணி நேர தீவிர முயற்சிக்கு பின்னர் அச்சிறுமி உயிருடன் மீட்கப்பட்டார்.

மீட்கப்பட்ட போது அவர் சுயநினைவுடன் இருந்தார். அவருக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top