பிரான்சில் ஒரு முதியவர் அளவுக்கு மீறிய குடிபோதையில் இருந்ததால் ஒரு சிறிய கத்தியைக் காட்டி உள்ளூர் வங்கிக்குள் நுழைந்து கொள்ளையடிக்க வந்தபோது பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை காலை பத்து மணியளவில் டேனியல் அன்ஃப்ரே(Daniel Anfray)(56) என்பவர் நார்மண்டியில் உள்ள மார்ட்டெயின் நகரில் ஒரு வங்கிக்குள் புகுந்தார். தன் முகம் கண்காணிப்பு கமெராவில் தெரிந்து விடாதபடி உள்ளாடையைத் தலையில் மாட்டி இருந்தார்.
வங்கியின் பெண் பணியாளர் ஒருவர் இவரிடமிருந்து கத்தியை பிடுங்கிக்கொண்டு, பொலிசுக்குத் தகவல் கொடுத்தார். இவரது ரத்தத்தில் 2 மி.கிராம் சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த திங்கட்கிழமை நீதிமன்றத்தில் இவரை பொலிசார் ஆஜர்படுத்தினர். இவரது சட்டதரனி, அன்ஃபரே அன்புக்கு ஏங்கும் முதியவர், இவரிடம் இந்த சமுதாயம் அன்பு பாராட்ட வேண்டும் என்று வாதாடினார்.
ஆனால் நீதிபதி, அன்ஃபரே கத்தியைக் காட்டி மிரட்டியதால் எட்டு மாதச் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார். இது தவிர இவர் மனநல சிகிச்சை, மது வெறுப்பு சிகிச்சை போன்றவையும் பெற வேண்டும்.
மேலும் ஆயுதங்களை வைத்திருக்கவோ, கையில் எடுத்துச் செல்லவோ கூடாது. மதுபானக்கடைகளின் அருகே கூடப் போகக்கூடாது என்றும் தீர்ப்பளித்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்து:
கருத்துரையிடுக