ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சிறுமி ஒருவரை ஏமாற்றி தமிழகத்திற்கு வரவழைத்து, இங்கு அவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய
அச்சிறுமியின் தோழி மற்றும் மூன்று வாலிபர்களை திருச்சி போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
ஆந்திராவை சேர்ந்த 17 வயது பெண், தனக்கு நல்ல வேலை வாங்கித்தருவதாக அவரது தோழி வாக்களித்ததை நம்பி சேலத்திற்கு வந்துள்ளார்.
சேலம் ரயில் நிலையத்திலிருந்து அப்பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்து சென்ற தோழி, பின்னர் அந்த பெண்ணுக்கு 3 நபர்களை அறிமுகப்படுத்திவிட்டு, இவர்கள் வேலைக்கு ஏற்பாடு செய்வார்கள் எனக்கூறி சென்றுவிட்டார்.
தனியாக இருந்த பெண்ணை திருச்சிக்கு அழைத்து வந்த மூவர், அங்கு ஒரு வீட்டில் அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி, அடித்து துன்புறுத்தியுள்ளனர்.
காலையில் அவ்வீட்டில் இருந்து தப்பிய அப்பெண், வழிபோக்கர்கள் உதவியோடு போலீசாரிடம் புகார் அளித்ததன் பேரில், இவரை ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு ஏமாற்றி வரவழைத்த தோழி மற்றும் அந்த மூன்று வாலிபர்களையும் போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடிவருகின்றனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்து:
கருத்துரையிடுக