புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

குமரி மாவட்டம் கருங்கல் அருகே பாலப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் (35). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் பெமி (8). கிறிஸ்டோபரின் மனைவி 2 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் இறந்து விட்டார். குழந்தையை கவனித்து கொள்வதற்காக, மனைவி இறந்த 6 மாதங்களுக்கு பிறகு நட்டாலம் பகுதியை
சேர்ந்த சஜிதாவை (22), கிறிஸ்டோபர் 2வது திருமணம் செய்தார். சஜிதாவும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். திருமணத்துக்கு பிறகு கிறிஸ்டோபர் வெளிநாடு சென்றதால் கருங்கல் அருகே மிடாலத்தில் உள்ள அவரது உறவினர்களுடன் சஜிதா, குழந்தை பெமி வசித்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த 17ம் தேதி நட்டாலத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று வருவதாக கூறி சென்றார் சஜிதா. நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் கிறிஸ்டோபரின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். பல இடங்களில் விசாரித்த போது, சஜிதா தாய் வீட்டுக்கு செல்லாமல் வாலிபர் ஒருவருடன் தப்பியது தெரியவந்தது. கிறிஸ்டோபரின் சகோதரி ஸ்டெல்லாபாய் போலீசில் புகார் அளித்தார். 8 பவுன் நகை, பணம், சொத்து பத்திரங்களை சஜிதா எடுத்து சென்று இருப்பதாகவும், அதை மீட்டுத் தருமாறும் புகாரில் கூறியிருந்தார்.

அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் சஜிதா, கேரளா மாநிலம் கொல்லம் அருகே சுனில் என்ற வாலிபருடன் குடும்பம் நடத்துவது தெரியவந்தது. அவர்களை கருங்கல் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். தேவிகோடு அருகே முந்திரி ஆலையில் வேலை பார்த்தபோது சஜிதாவுக்கு சுனிலுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதனால் அவருடன் கேரளாவுக்கு தப்பியுள்ளார் சஜிதா. அங்கு ஒரு கோயிலில் சுனில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

இதையடுத்து கிறிஸ்டோபரின் உறவினர்களும் காவல் நிலையத்துக்கு அழைக்கப்பட்டனர். கிறிஸ்டோபரின் சகோதரி ஸ்டெல்லாபாய், சஜிதா யாருடன் வேண்டுமானாலும் செல்லட்டும். எங்களுக்கு சொந்தமான 8 பவுன் தங்க நகை மற்றும் கிறிஸ்டோபர், சஜிதா பெயரில் வாங்கிய நிலம் ஆகியவற்றை எங்களிடம் ஒப்படைத்தால் போதும் என்றார். தொடர்ந்து சஜிதா, கிறிஸ்டோபர் கட்டிய தாலி உள்பட அவர்களுக்கு சொந்தமான 8 பவுன் நகையை கழற்றி கொடுத்தார். இரு தரப்பினரும் எழுதி கொடுத்ததால் பிரச்னை முடிவுக்கு வந்தது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top