யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் வண்டியில் சென்று கொண்டிருந்தவர் அதிவேகம் காரணமாக வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாது வீதியோரத்தில் குவிக்கப்பட்டிருந்த கற்குவியலுடன் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 37 வயதான ஒருவர் என யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.
இவரது பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ள நிலையில் யாழ். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்து:
கருத்துரையிடுக