ஜெர்மனியில் பெர்லினில் தலைப்பகுதியில் பென்சிலுடன் சுமார் 15 வருடங்கள் வாழ்ந்த வாலிபருக்கு அறுவை சிகிச்சை மூலமாக பென்சில் வெளியேற்றப்பட்டுள்ளது.
ஆப்கானை சேர்ந்த 24 வயது வாலிபர் பார்வை குறைபாடு, கடுமையான தலைவலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்தார். இவரை தீவிரமாக பரிசோதித்த மருத்துவர்கள் சி.டி ஸ்கானின் மூலமாக அவரது தலையில் ஏதோ ஒரு பொருள் இருந்ததை கண்டனர்.
ஸ்கானில் தெரிந்த பொருள் ஒரு 'பென்சில்' என்பதை அறிந்த மருத்துவர்கள் திடுக்கிட்டனர். சுமார் 7 செ.மீ இருந்த அந்த 'பென்சில்' எப்படி தலைக்குள் சென்றது எனக் குழம்பிய மருத்துவர்கள், அந்த வாலிபரிடம் விசாரிக்க்த்தபோது,15 வருடங்களுக்கு முன்னர் அவர் விளையாடுகையில் கீழே விழுந்து அடிப்பட்டதில் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்தது மட்டும்தான் அவருக்கு ஞாபகம் இருந்தது.
தலையில் இருந்த அந்த பென்சில் கண்களின் பின்புறத்தை பாதித்துக்கொண்டிருந்ததால் அவரது பார்வை குறைந்ததாக தெரிவித்த மருத்துவர்கள், அறுவை சிகிச்சை மூலமாக அந்த பென்சிலை வெளியேற்றினர்.
அறுவை சிகிச்சை முடிந்தபிறகும், அந்த வாலிபருக்கு கண் பார்வை மங்கலாக இருந்தது, இதற்க்கு அந்த பென்சில் தொடர்ந்து கண் பார்வையை பாதித்தது தான் காரணம் எனக் கூறப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்து:
கருத்துரையிடுக