குற்றங்களை கட்டுக்குள் கொண்டுவர சரியான நடவடிக்கைகள் எடுக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
சீனாவில் அண்மை காலமாக பல ஆசிரியர்கள் அவர்களிடம் கல்வி கற்கும் சிறுமிகளிடம் தகாத முறையில் நடந்துக்கொள்வதாக புகார்கள் வந்ததை அடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
டோங்பு என்னும் இடத்தில் மழலையருக்கு பாடம் கற்பிக்கும் 55 வயது ஆசிரியர் ஒருவர் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
இதே போன்ற சம்பவத்தில். ஆசிரியராக பணிபுரியும் 42 வயது நிரம்பிய நபர் ஒருவர் சுமார் 12 பெண் குழந்தைகளிடம் தகாத முறையில் நடந்துக்கொண்டதாக ஒப்புக்கொண்டார்.
மற்றொரு சம்பவத்தில், பிரபல பள்ளி நிர்வாகி ஒருவர் 5 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
இதே போல் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பிற ஆசிரியர்களை குழந்தைகளுக்கு எதிராக பாலியல் கொடுமை செய்த குற்றத்திற்காக போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவங்களை எல்லாம் சுட்டிக்காட்டிய சீன உச்ச நீதிமன்றம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளில் ஆசிரியர்களே ஈடுபடுவதை சகித்துக்கொள்ள முடியாது எனவும், இத்தகைய கொடூர செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், குழந்தைகளுக்கு அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்யவும் வலியுறுத்தியுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக