அரச வேலை பெற்றுத்தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் நால்வர் ஸ்ரீபுர, ஜயந்திபுர பிரதேசத்தில் கைது
செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர் தொடர்பில் கிடைக்கப் பெற்ற பல முறைப்பாடுகளுக்கு இணங்க இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்களால் 4லட்சத்து 85ஆயிரம் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் கெபிட்டிகொல்லாவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியவேளை எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்து:
கருத்துரையிடுக