டி டே படத்திற்காக மகள் ஸ்ருதியின் கன்னத்தில் தழும்பு ஏற்பட கமல் ஹாசன் உதவி செய்துள்ளார். ஸ்ருதி ஹாஸன் ஒசாமா பின் லேடனின் கதையான டி டே இந்தி படத்தில் விலை மாதுவாக நடிக்கிறார். இதில் அவர் 16 வயதில் விலை
மாதுவானபோது பெண்களை வைத்து தொழில் செய்யும் ஒருவர் ஸ்ருதியின் கன்னத்தை கிழித்து விடுகிறார். இதனால் அவரது கன்னத்தில் பெரிய தழும்பு ஏற்படுகிறது. ஸ்ருதி கன்னத்தில் அவ்வளவு பெரிய தழும்பை ஏற்படுத்த கெட்டப்பில் புதுமை புகுத்தும் அவரது தந்தை கமல் ஹாசன் உதவி செய்துள்ளார்.
16 வயதில் ஏற்பட்ட தழும்பு ஆண்டுகள் ஆக ஆக எப்படி இருக்கும், என்ன நிறத்தில் இருக்கும் என்பதை கமல் ஆய்வு செய்துள்ளார். தழும்பு எந்த ஆழத்தில் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அவர் தெரிவித்துள்ளார். அதன்படி ஸ்ருதியின் கன்னத்தில் தழும்பு இருப்பது போன்று மேக்கப் போட்டுள்ளனர். பார்ப்பதற்கு நிஜத் தழும்பு போன்றே உள்ளது.
அவ்வை சண்முகி படத்தில் தெம்பான மாமியாக வந்து கமல் அசத்தினார். அவருக்கு இந்த தழும்பெல்லாம் ஒரு பெரிய விஷயமா என்ன. தசாவதாரம் படத்தில் கமலின் பத்து அவதாரங்களுமே அருமையாக இருந்தது. இதற்காக அவர் மெனக்கெட்டு தனது லுக்கை மாற்றினார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்து:
கருத்துரையிடுக