கோவை காந்திமாநகரைச் சேர்ந்தவர் நித்யா (வயது 31). இவர் அதே பகுதியில் அழகு நிலையம் நடத்தி வருகிறார். இவர் பெண்களை விபசாரத்தில் தள்ளுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்
கிடைத்தது.
இதையடுத்து பீளமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் நித்யாவின் அழகு நிலையத்துக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது நித்யா பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.
அங்கு இருந்த திருப்பூரை சேர்ந்த தீபா (21) என்ற பெண் மீட்கப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது தீபா
போலீசாரிடம் கூறியதாவது:-
பெங்களூரைச் சேர்ந்த நான் திருப்பூரில் வேலம்மாள் நகர் 7-வது வீதியில் வசிக்கிறேன். எனது கணவர் கூலி வேலை செய்பவர். எங்களுக்கு குழந்தை உள்ளது. என் கணவருக்கு சரியான வேலை கிடைக்காததால் குடும்பம் நடத்த சிரமப்பட்டோம்.
எனவே நான் வேலைக்கு செல்ல நினைத்தேன். அப்போதுதான் நித்யாவின் அழகு நிலையத்தில் வேலை இருப்பது தெரியவந்தது. எனவே அங்கு நான் வேலைக்கு சேர்ந்தேன். அங்கு எனக்கு தரப்பட்ட சம்பளம் போதவில்லை. அப்போது நித்யா நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தைகள் கூறி என்னை விபசாரத்தில் தள்ளினார். அவரும் விப சாரத்தில் ஈடுபட்டு வந்தார். என் இளமையை பயன்படுத்தி வாடிக்கையாளர்களை கவர்ந்தார். நானும் அவர் கூறியபடியே விபசாரத்தில் ஈடுபட்டேன். இவ்வாறு தீபா போலீசாரிடம் கூறினார்.
இதைத்தொடர்ந்து போலீசார் நித்யாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது நித்யா கூறியதாவது:-
என்னிடம் அழகு நிலையத்துக்கு வாடிக்கையாளர்களாக வரும் பெண்களிடம் அன்பாக பேசி, அவர்களது குடும்ப சூழ்நிலை குறித்து தகவல்களை கேட்பேன். கணவனால் கைவிடப்பட்டோர், கணவனை இழந்த பெண்கள், பண ஆசையில் இருக்கும் பெண்களிடம் விபசாரத்தில் ஈடுபட்டால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று கூறுவேன்.
அதற்கு சம்மதம் தெரிவிக்கும் பெண்களை விபசாரத்துக்கு பயன்படுத்துவேன். வாடிக்கையாளர்கள் கேட்கும் இடத்திற்கே பெண்களை அனுப்பி வைப்பேன். இதனால் என்னிடம் வாடிக்கையாளர்கள் அதிகளவில் இருந்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து நித்யாவை போலீசார் கைது செய்தனர். தீபா மீட்கப்பட்டார். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். மாஜிஸ்திரேட்டு உத்தரவின் பேரில் அவர்கள் பேரும் காப்பகத்தில் அடைக்கப்பட்டனர்.
போலீசில் சிக்கியுள்ள நித்யா சுமார் 10-க்கும் மேற்பட்ட குடும்ப பெண்களை நித்யா விபசாரத்தில் ஈடுபடுத்தி இருப்பது விசாரணையில் தெரியவந்தது. அந்த பெண்களை பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்து:
கருத்துரையிடுக