இந்தியாவில் சிறுமிகளை பலவந்தம் செய்த 2 வாலிபர்கள் கைது
அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த 11 வயது சிறுமி மங்களா (பெயர் மாற்றப்பட்டு உள்ளது).
இவரை அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் (27) என்ற
வாலிபர் யானைகள் தொட்டியில் தண்ணீர் குடிப்பதை காட்டுகிறேன் என்று வனப்பகுதிக்கு அழைத்து சென்று மானபங்கம் செய்ததாக புகார் கூறப்பட்டது.
இதையொட்டி அந்தியூர் போலீசார் பிரகாசை கைதுசெய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட இவர் கோபி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இதுபோல வெள்ளி திருப்பூர் வட்டக்காடு என்ற இடத்தில் 12 வயது சிறுமியை மானபங்கம் செய்ததாக பாரதி என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
இவர் பவானி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி, கலெக்டர் சண்முகத்துக்கு பரிந்துரை செய்தார்.
இதையொட்டி பிரகாஷ் மற்றும் பாரதி ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சண்முகம் உத்தரவிட்டார்
0 கருத்து:
கருத்துரையிடுக