புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இறந்ததாக அறிவிக்கப்பட்ட நபர், உயிருடன் திரும்பி வந்ததால் உறவினர்கள் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவு பகுதியில் உள்ள பாப்பாகுடிப்பட்டியைச் சேர்ந்த பெருமாள் மகன் சந்தோஷ்குமார்(வயது 20).

இவர் வெல்டராக வேலை செய்து வருகிறார். குடிப்பழக்கம் உள்ள இவர், கீழையூரில் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் இருக்கையில் படுத்திருந்தாராம்.

அப்போது, அதிக போதையில் தவறிக் கீழே விழுந்து காயமடைந்தார். அருகிலிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸில் ஏற்றி, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிகிச்சையிலிருந்த அவர் வெள்ளிக்கிழமை மாலை இறந்துவிட்டதாக மருத்துவமனை காவல் நிலையத்திலிருந்து கீழவளவு பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சந்தோஷ்குமார் இறந்ததாக பொலிஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

தகவலறிந்து சனிக்கிழமை காலை பிரேதப் பரிசோதனைக்காக உறவினர்கள் சோகத்துடன் அரசு மருத்துவமனைக்குச் சென்றனர்.

இதனிடையே, சந்தோஷ்குமார் உயிருடன் சனிக்கிழமை காலை ஊருக்கு வந்து சேர்ந்தார். இதைப் பார்த்த அனைவரும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top