சவூதியில் தன்னை மனைவியாக்க தோழிகள் இருவரை திருமணம் செய்ய வேண்டும்!
சவூதியைச் சேர்ந்த பெண்ணொருவர் தன்னை மனைவியாக்க வேண்டுமாயின் எனது தோழிகள் இருவரையும் திருமணம் செய்ய வேண்டும் என அந்நாட்டின்
மணமகனொருவரை அதிர்ச்சியளித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண் பாடசாலை ஆசியராக கடமையாற்றுகிறார். இவ்வாசிரியை கூறியதை ஆரம்பத்தில் வேடிக்கையாக எடுத்துள்ளார் மணமகன். ஆனால் பின்னர் தனது மணமகள் அவரது கோரிக்கையில் தீவிரமாகவும் உண்மையாகவும் இருப்பதனை உணர்ந்துள்ளார்.
இதனையடுத்து குடும்பத்தாருடன் பேசி இறுதியில் கோரிக்கை வைத்த ஆசிரியை மணமகளையும் அவரது தோழிகளான மேலும் இரு ஆசிரியைகளையும் முடிப்பதற்கு மணமகன் சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதற்காக தற்போது மணமகன் தனது மூன்று மனைவிமாருக்கும் தனியான 3 வீடுகளை வாடகைக்கு எடுத்துள்ளதாகவும் அவர்களது வாழ்க்கை முறையை கலந்து ஆலோசித்து முடிவு செய்துள்ளதாகும் அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
0 கருத்து:
கருத்துரையிடுக