யாழ்.மாவட்டத்தில் 4 மாதங்களில் பல கோடி கொள்ளை
யாழ்.மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்களில் நகைகள் உட்பட இரண்டரைக் கோடி ரூபாவுக்கு அதிகமான பெறுமதிகொண்ட பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்
தெரிவித்தனர்.
கொள்ளையடிக்கப்பட்டவற்றில் குறிப்பிட்டளவான பொருள்களை மாத்திரமே தாம் மீட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
வாராந்தம் நகைகள் உட்பட இலட்சக்கணக்கான பெறுமதி கொண்ட பொருள்கள் திருட்டு,கொள்ளை மூலமாக குடாநாட்டில் பறிபோகின்றன.
கடந்த மாதம் 52 இலட்சத்து 49 ஆயிரம் ரூபாவுக்கும் மேற்பட்ட பொருள்கள் கொள்ளை போயுள்ளன. கடந்த மார்ச் மாதம் 98 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதி கொண்ட பொருள்கள் கொள்ளை போயுள்ளன.
கடந்த பெப்ரவரி மாதம் 18 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி மாதம் நகைகள் உட்பட 95 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 கருத்து:
கருத்துரையிடுக