புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு



அமெரிக்காவின் பால்டிமோர் சிறையில் போதைப் பொருள் கடத்தல் கைதிகள் நிறையப் பேர் அடைக்கப்பட்டுள்ளனர். அந்த சிறையில் பெண் காவலர்கள் அதிகம். இவர்களில் பலர் கைதிகளுடன் ரகசிய உறவு வைத்துக் கொண்டு அவர்களுக்கு பல
உதவிகளைச் செய்வதாக ஏராளமான புகார்கள் குவிந்தன. இதையடுத்து அதிகாரிகள் ரகசியக் கண்காணிப்பை முடுக்கி விட்டனர். இதில் 630 பெண் காவலர்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களுக்கு கைதிகளுக்கான நேரடி காவல் பணி மறுக்கப்பட்டு வேறு பணிகள் தரப்பட்டன. இவர்களில் 13 பேர் மீது தற்போது கடுமையான குற்றச்சாட்டுக்கள் கிளம்பியுள்ளன. அதாவது இவர்கள் போதைப் பொருள் கைதிகளுடன் செக்ஸ் உறவு வைத்திருந்தனர் என்பதே அந்தப் புகாராகும். அவர்களில் நான்கு பேர் ஒரு கைதியுடன் உறவு கொண்டு குழந்தைகளையும் பெற்றுள்ளனர் என்பது இன்னொரு பரபரப்பாகும்.


இந்த 13 பெண்களும், தங்களுடன் நட்பு கொண்டிருந்த கைதிகளுக்கு செல்போன்கள், போதைப் பொருட்களை கடத்திக் கொண்டு வர உதவியுள்ளனராம். விரைவில் குற்றச்சாட்டுக்குள்ளானோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாம்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top