புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 49-வது லீக் இன்று மாலை 4 மணிக்கு தொடங்கி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ்
அணிகள் மோதின.

டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். மும்பை அணியைச் சேர்ந்த சுமித்- தெண்டுல்கர் களம் இறங்கினார்கள். சென்னை அணியின் நேர்த்தியான பந்து வீச்சால் தெண்டுல்கரும், சுமித்தும் ரன் அடிக்க திணறினார்கள். இதனால் முதல் 6 ஓவரில் மும்பை அணி 32 ரன்கள் மட்டுமே எடுத்தது.

18 பந்தில் 15 ரன்கள் எடுத்த தெண்டுல்கர் ஜடேஜா பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆகி வெளியேறினார். 2-வது விக்கெட்டுக்கு சுமித்துடன் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். 22 ரன் எடுத்த நிலையில் பிராவோ பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

அடுத்து கார்த்திக் உடன் அதிரடி பேட்ஸ்மேன் பொல்லார்டு ஜோடி சேர்ந்தார். பொல்லார்டு 1 ரன் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்தார். அடுத்து வந்த சர்மா 39 ரன்னும், ஹர்பஜன் சிங் 11 பந்தில் 25 ரன்கள் எடுக்க மும்பை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்தது. சென்னை அணி சார்பில் ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினார்.

140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்தது. முதல் ஓவரை ஜான்சன் வீசினார். 4-வது பந்தில் ஹசி, பொல்லார்டிடம் கேட்ச் கொடுத்தார். அதை அவர் தவறவிட பந்து பவுண்டரி சென்றது. அடுத்த பந்திலும் பொல்லார்டிடம் கேட்ச் கொடுத்தார். அதையும் பிடிக்க தவறினார். அடுத்த கடைசி பந்திலும் கேட்ச் கொடுத்தார் ஹசி. அதையும் பொல்லார்டு கேட்ச் பிடிக்க தவறினார். தொடர்ந்து பொல்லார்டு 3 கேட்சை தவறவிட்டது ஆச்சரியம் அளித்தது.

3-வது ஓவரில் சென்னைக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஜான்சன் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் விஜய் கிளீன் போல்டாகி வெளியேறினார். அடுத்த பந்தில் ரெய்னா ரன் ஏதும் எடுக்காமல் முதல் பந்திலேயே பொல்லார்டிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 3-வது மற்றும் 4-வது பந்தில் ரன் எடுக்காத பத்ரிநாத் 5-வது பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆகி வெளியேறினார். இதனால் முதல் ஓவரில் விக்கெட் வீழ்த்த முடியாத ஜான்சன் தனது 2-வது ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

அதன்பின் வந்த பிராவோ 9, அஸ்வின் 2, டோனி 10, ஜடேஜா 20, மோரிஸ் 1, சர்மா 0 ரன்களில் அவுட் ஆக சென்னை அணி 79 ரன்களில் சுருண்டது. இதனால் மும்பை அணி 60 ரன்களில் அபார வெற்றி பெற்றது.  மும்பை அணி சார்பில் ஜான்சன், ஓஜா தலா 3 விக்கெட்டுகளையும், மலிங்கா 2 விக்கெட்டும் எடுத்தனர். இந்த ஐ.பி.எல். சீசனில் குறைந்த பட்ச ஸ்கோர் இதுவாகும்.

இந்த வெற்றி மூலம் மும்பை அணி 11 போட்டிகளில் 7-ல் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top