பெருந்துறை அருகே உள்ள கள்ளியம்புதூரைச் சேர்ந்தவர் மகேஷ். இவரது தம்பி யுவராஜ். இவர்கள் இருவரும் நெசவுத் தொழில் செய்து வந்தனர். இந்நிலையில் இன்று இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது ஆத்திரமடைந்த மகேஷ், தம்பி யுவராஜை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் பலத்த காயம் அடைந்த யுவராஜ் சிறிது நேரத்தில் இறந்துவிட்டார். பின்னர் விஷம் குடித்த மகேஷ் சிறிது நேரத்தில் இறந்துவிட்டார்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். யுவராஜ், தன் அண்ணனிடம் செலவுக்கு பணம் கேட்டதாகவும், மகேஷ் பணம் தர மறுத்ததால் மோதல் ஏற்பட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக