மட்டக்களப்பு - காத்தான்குடி வங்காளா விரிகுடா கடற்கரையில் அன்வர் பள்ளிவாயலுக்கு அருகாமையில் இன்று (05) மதியம் 76 வயது வயோதிபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அலியார் முஹம்மது இப்றாஹீம் என்ற 76 வயது வயோதிபரே சடலமாக மீட்கப்பட்டார். இவர் எட்டு பெண் பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்படுகிறது.
அலியார் முஹம்மது இப்றாஹீம் என்பவர் பள்ளிவாயலில் முஅத்தினாக பல வருடங்கள் கடமையாற்றி தற்போது வீட்டில் ஒய்வு பெற்று வந்ததாகவும் இன்று லுஹர் தொழுகைக்காக சுமார் 12 மணியளவில் வீட்டில் இருந்து பள்ளிவாயலுக்கு சென்றவர் கடற்கரையில் உள்ள சவுக்கு மரத்தில் தனது துவிச்சக்கரவண்டியை சாய்த்து விட்டு கடலுக்கு சென்ற நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை எனவும் அவரின் உறவினரான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் தெரிவித்தார்.
இது தொடர்பில் பிரதேச மக்களினால் காத்தான்குடி பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக