கொட்டக்கலை - மூங்கில்தோட்டம் (பொரஸ்ட்கிறீக்) பகுதியில் தனது தாய் இந்த செய்தியை கேள்வியுற்ற மகள் அதிர்ச்சியில் ஓடிச் சென்று காணாமல் போயுள்ளார்.
அத்துடன் தாயின் மரண செய்தியை கேள்வியுற்ற மகன் அதிர்ச்சியில் வீட்டினுள் விழுந்து காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
மூங்கில் கொட்டக்கலையைச் சேர்ந்த 58 வயதான ருக்மணி என்ற பெண் நேற்று இரவு திடீர் சுகயீனம் காரணமாக கொட்டக்கலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தாய் மாரடைப்பால் நேற்று இரவே மரணமடைந்துள்ளார்.
வைத்தியசாலையில் தாயை பார்க்கச் சென்ற மகள் (ரட்ணகுமாரி 24 வயது) தாய் இறந்துவிட்டதாக வைத்தியசாலையில் கூறியதும் இறந்த தாயை பார்த்த அதிர்ச்சியில் வைத்தியசாலையை விட்டு ஓடிச் சென்றுள்ளார்.
அவ்வாறு ஓடிச் சென்ற அவரை இதுவரை காணவில்லை என திம்புள்ள-பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தாயின் மரண செய்தியை கேட்ட மகன் (ரட்ணகுமார்) வீட்டில் விழுந்து ஏற்பட்ட காயத்தால் கொட்டக்கலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தால் மூங்கில் கொட்டக்கலை தோட்ட மக்கள் சோகத்தில் உள்ளதுடன் இன்றைய தினம் எவரும் வேலைக்குச் செல்லவில்லை என எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
காணாமல் போன யுவதியை தேடும் பணியில் திம்புள்ள-பத்தனை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக