புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


விவசாய நிலமொன்றில் புதையல் அகழ முயன்ற நால்வர் இன்று (05) அதிகாலை 3 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சாலியவெவ - நீலபெம்ம பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புதையல் அகழ பயன்படுத்தப்பட்ட கத்தி உள்ளிட்ட ஆயுதங்களும் கோழி, பூமாலை, வெற்றிலை உள்ளிட்ட பூஜை பொருட்களும் முச்சக்கர வண்டியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் புத்தளம் - வனாத்தவில்லு பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.

சந்தேகநகபர்கள் புத்தம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top