ஐ.பி.எல். கிரிக்கெட் 47 வது லீக்-ராஜஸ்தானை வீழ்த்தியது கொல்கத்தா
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 47-வது லீக் போட்டி இன்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ்
அணிகள் விளையாடி வருகின்றன.
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் டிராவிட் பேட்டிங் தேர்வு செய்தார். முற்றிலும் சுழற்பந்து வீச்சுக்கு ஆடுகளம் சாதகமாக இருந்ததால் இரண்டு அணியிலும் வேகப்பந்து வீச்சாளருக்குப் பதிலாக சுழற்பந்து வீச்சாளர்களை களம் இறக்கினர்.
ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக வாட்சன்- ரகானே களம் இறங்கினார்கள். ரகானே 6 ரன்னில் செனநாயகே பந்தில் ஸ்டம்பிங் ஆகி வெளியேறினார். 2-வது விக்கெட்டுக்கு வாட்சன் உடன் பால்க்னர் ஜோடி சேர்ந்தார். இவர் 1 ரன் எடுத்த திருப்தியில் இக்பால் அப்துல்லா பந்தில் ஆட்டம் இழந்தார். நிதானமாக ஆடிய வாட்சன் சுழற்பந்தில் ரன் எடுக்க திணறினார். அவர் 34 பந்தில் 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதில் வெறும் 4 பவுண்டரிகள் மட்டுமே அடங்கும்.
அதன்பின் வந்த சாம்சன் சிறப்பாக விளையாடி 40 ரன்களும், ஒவைஷ் ஷா 24 ரன்களும் எடுத்தனர். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் என்ற கௌரவமான ஸ்கோரை எட்டியது. டிராவிட் 8-வது வீரராக களம் இறங்கி 6 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
பின்னர் 133 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 17.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களை எடுத்து வெற்றி இலக்கை எட்டியது.
0 கருத்து:
கருத்துரையிடுக