மனிதனின் தலை முடியை வைத்து அவர்களின் பூர்வீகத்தை அறியலாம்
மனிதனின் முடியை வைத்து, அவர்கள் இடம்பெயர்ந்த வரலாற்றை அறியலாம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் ஒரு நூற்றாண்டுக்கு முற்பட்ட சில முடிக்கற்றைகளை பிரிட்டிஷ்
மனிதவியல் ஆராய்ச்சியாளர் சேகரித்தார். இதை ஆராய்ந்த போது வடகிழக்கு ஆப்ரிக்காவிலிருந்து மனிதர்கள் இடம்பெயர்ந்து வந்திருக்கலாம் என தெரிய வந்தது. இந்த இடப்பெயர்ச்சி 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.
ஆப்ரிக்காவை விட்டு வெளியேறும் போது ஒரே இனமாகவும், முதலில் கருப்பு தோலையும் கொண்டிருந்தனர். பூமத்திய ரேகை, ஐரோப்பா, ஆசியா ஆகியவற்றின் வழியான பரிணாம பயணத்தின்போது தோலின் நிறம் மாறியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. வடக்கு அட்சரேகைகளில் வாழ்ந்தபோது முற்றிலுமான வெளிர் தோலை பெற்றனர்.டென்மார்க்கில் உள்ள தேசிய வரலாற்று அருங்காட்சியக குழுவினர், எஸ்கி வில்லர்சிலவ் தலைமையில் இந்த ஆராய்ச்சியை நடத்தினர். ஆப்ரிக்காவில் வாழ்ந்தவர்கள் தான் மிகப்பழமையானவர்கள் என்று அந்த ஆராய்ச்சி குழு தெரிவிக்கிறது.
இக்குழு ஆராய்ந்த முடியில் ஐரோப்பியர்களின் ஜீன்கள் இருந்தன. உலகில் உள்ள மற்ற இனத்தவர்களின் ஜீன்களுடன் ஒப்பிடுகையில், ஆப்ரிக்காவை விட்டு வெளியேறிய நவீன இனத்தவர் ஐரோப்பியர் என தெரிய வருகிறது. ஆப்ரிக்கர்களிலிருந்து ஐரோப்பியர்களும், கிழக்கு ஆசியர்களும் பிரிந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. பின் ஆசியர்களிலிருந்து, ஆஸ்திரேலியர்கள் பிரிந்தனர்.
முடியில் இருந்த டி.என்.ஏ.,வை வைத்து பார்க்கும் போது யுரேசியர்கள் 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பிரிந்ததும், ஐரோப்பியர்களும், கிழக்கு ஆசியர்களும் 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பிரிந்ததும் தெரிய வந்தது. ஆஸ்திரேலியாவுக்கு 44 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் இடம்பெயர்ந்து வந்துள்ளனர். இந்த காலத்தில் ஆஸ்திரேலியாவில் இருந்த கற்கருவிகளை விட ஐரோப்பாவில் சிறந்த கற்கருவிகள் இருந்தன. இதனால் ஐரோப்பியர்கள் முதலில் பரிணாம வளர்ச்சி பெற்றனர் என கருதலாம். மனிதர்கள், 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் படகு போக்குவரத்தை துவக்கியுள்ளனர் என கூறப்படுகிறது. 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தான், மனித இனத்தில் கலாசார மாற்றம் ஏற்பட்டுள்ளது. அப்போது மக்கள்தொகை வேகமான வளர்ச்சி கண்டது.
இந்த காலகட்டத்தில் விலங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். கி.பி., 1250ம் ஆண்டு நியூசிலாந்தை அடைந்தனர். குறிப்பிடத்தக்க மாற்றங்கள் 6 ஆயிரம் முதல் 4 ஆயிரம் ஆண்டுகளுக்குள் நடந்து முடிந்தது. இவ்வாறு ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக