பிபிலை பகுதியில் திருமண வைபவத்தில் கைகலப்பு-ஒருவர் பலி
பிபிலை பகுதியில் திருமண வைபவம் ஒன்றில் ஏற்பட்ட கருத்து மோதல் வலுப்பெற்றதால், ஏற்பட்ட கைகலப்பின் போது கத்தியால் குத்தி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொலை சம்பவம்
நேற்றிரவு 11.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பிபிலை கனவேகல்ல பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞன் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
கொலை செய்த நபர் பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்றுள்ளதோடு, அவரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை பிபில பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
இளைஞனின் சடலம் எக்கியன்கும்புர வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை இன்று நடைபெறவுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக