சீனாவில் மாடு மற்றும் ஆடுகளின் மாமிசத்தோடு எலி மற்றும் நரியின் மாமிசத்தை கலப்படம் செய்த குற்றத்திற்காக சுமார் 904 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சீனாவில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆம் தேதியில் இருந்து சுமார் 382 வழக்குகள் மாமிச கலப்பட குற்றத்திற்காக பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட 904 பேரை கைது செய்துள்ள போலீசார் சுமார் 20,000 டன் சுகாதாரமற்ற மாமிசத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
இவ்வழக்குகளில், செயற்கை தண்ணீர் ஊசி மூலம் மாமிசத்தின் எடையை அதிகமாக காட்டுதல், ரசாயனங்கள் மூலம் மாடு மற்றும் ஆட்டின் மாமிசத்துடம் எலி மற்றும் நரியின் மாமிசத்தை கலத்தல் ஆகிய குற்றங்களும் அடங்கும்.
0 கருத்து:
கருத்துரையிடுக