புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இந்தியா-சென்னையில், காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி அரிவாளால் வெட்டப்பட்டார். மாணவியை வெட்டிய மாணவரை கல்லூரி காவலாளிகள் மடக்கிப் பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர்.


காஞ்சீபுரம் அருகே உள்ள மானாம்பதி கண்டிகையை சேர்ந்த மாணவி, சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் பிஎஸ்சி 3 ஆம் ஆண்டு படித்து வருகிறார். அங்குள்ள கல்லூரி விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வருகிறார்.

நேற்று மதியம் கல்லூரி அருகே தோழிகளுடன் மாணவி நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த வாலிபர் திடீரென தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் மாணவியை சரமாரியாக வெட்டினார். இதில் அவர் முகத்தில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்

இதை பார்த்த மாணவிகள் கூச்சல் போட்டனர். சத்தம் கேட்டு ஓடி வந்த கல்லூரி காவலாளிகள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து குரோம்பேட்டை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். படுகாயமடைந்த மாணவி மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

பிடிபட்ட வாலிபரை காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், அவர் கடலூரை சேர்ந்த சரவணகுமார் (வயது 22) என்பதும், கடலூரில் உள்ள கல்லூரியில் பி.காம் 3 ஆம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது.

காவல்துறையினர் சரவணகுமாரிடம் மேலும் விசாரணை நடத்தியபோது, மாணவி கடந்த 2 ஆண்டுகளாக அவரை காதலித்து விட்டு தற்போது நண்பராகதான் பழகினேன், காதலிக்கவில்லை எனக் கூறி விட்டதால், ஆத்திரத்தில் அவரை கொலை செய்ய அரிவாளுடன் இரு சக்கர வாகனத்தில் கடலூரில் இருந்து வந்தது தெரிய வந்தது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top