புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இந்தியா-புதுச்சேரியில் மனைவியின் அக்காள் மகளுடன் கள்ளக்காதல் வைத்துக் கொண்டு 3வது முறையாக ஓடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். வில்லியனூரைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி (35) கணவரை விட்டுப் பிரிந்தவர். இவருக்கும் சையத் ஆரிப் என்பவருக்கும்,
ராஜலட்சுமிக்கும் இடையே காதல் ஏற்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன் இருவரும் திருமணம் செய்து கொண்டார்.

இந் நிலையில் ராஜலட்சுமியின் அக்காள் ராஜவள்ளி தனது 5 மகள்களையும் ராஜலட்சுமியின் பொறுப்பில் ஒப்படைத்து விட்டு துபாய்க்கு வேலைக்கு சென்று விட்டார். ராஜவள்ளியின் 3வது மகள் இளவரசிக்கும், சையது ஆரிப்புக்கும் இடையே தவறான பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. கடந்த டிசம்பரில் இளவரசியை அழைத்துக் கொண்டு சையத் ஆரிப் வீட்டை விட்டுப் போய்விட்டார்.

ராஜலட்சுமி இது குறித்து காவல்நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து இளவரசியை மீட்டு ராஜவள்ளியிடம் ஒப்படைத்தனர். இந் நிலையில் சில வாரங்களுக்கு முன் மீண்டும் இளவரசி மீண்டும் சையத் ஆரீப்புடன் வீட்டை விட்டு ஓடிவிட்டார்.

சில நாட்கள் வெளியூரில் இருந்துவிட்டு மீண்டும் புதுச்சேரி திருப்பினர். இருவரின் உறவினர்களும் புத்திமதி கூறி இருவரையும் பிரித்தனர்.

இந் நிலையில் கடந்த 25ம் தேதி ஆரீப் மீண்டும் இளவரசியை கூட்டிக்கொண்டு 3வது முறையாக ஓட்டம் பிடித்தார். இது குறித்து ராஜலட்சுமி மீண்டும் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து ஆரீப், இளவரசியை போலீசார் தேடி வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top