சித்தர்கள் தத்துவப் படி மனித உடல் என்பது அன்னமயகோசம், பிராணமயகோசம், ஞானமய கோசம், என்று மூன்று வகைப்படும் கண்ணுக்கு தெரியும் ஸ்தூல சரீரம் அன்னமயமானது அதாவது சதை, எலும்பு, ரத்தம் சம்பந்தப் பட்டது பிராணமயமென்றால் சூட்சம். கண்ணுக்கு
தெரியாத உயிர் சம்பந்தப் பட்டது
ஞானமயமென்றால் எண்ணங்கள் கர்மாக்கள் சம்பந்தப் பட்டது இதுவும் கண்ணுக்கு தெரியாத சரீரமாகும் உயிர் பிரிந்த பிறகு அன்னமய கோசம் அழிந்து விடுவிறது மற்ற இரண்டும் தான் ஒன்றோடு ஒன்று பிரியாமல் பித்துரு லோகத்தில் வாசம் செய்கிறது
இதையே ஆவி என்றும் பேய் என்றும் அழைக்கிறார்கள் ஆவி வடிவம் என்றாலே அது நகர்ந்து செல்ல உறுப்புகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை அவர்கள் நினைத்தப் படி நினைத்த இடத்திற்கு நிமிட நேரத்தில் நகர்ந்தே செல்லலாம் அதாவது காற்று போல
அதனால் ஆவிகள் தாங்கள் நடமாட கால்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை ஆனாலும் பலர் நினைக்கிறப் படி ஆவிகளுக்கு கால்கள் இல்லாமலில்லை கால்கள் உண்டு தான் வாழ்ந்த போது பெற்றிருந்த சரீரத்தின் சாயலிலேயே பல ஆவிகள் நடமாடுவதாக அமானுஷ்ய ஆய்வுகள் சொல்கின்றன
எனவே பேய்களுக்கு கால் உண்டு பேய்களை நம்பாதவர்களுக்கு இந்த கேள்வியும் பதிலும் வேடிக்கையாக தோன்றும் நாம் அதைப் பற்றி அக்கறை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை
0 கருத்து:
கருத்துரையிடுக