யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டப்பிராயில் 5 வயதுச் சிறுமியைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 59 வயதுடைய முதியவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.
சிரோஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜிப்ரி தெரிவித்துள்ளார்.
யாழ். பொலிஸ் தலமையகத்தில் இன்று (03) நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
குறித்த 5 வயதுச் சிறுமியை பற்றை ஒன்றுக்குள் அழைத்துச் சென்று முதியவர் அவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.
குறித்த சிறுமி வைத்தியசாலையில் மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்துடன் விநாயகர் வீதி கொக்குவிலைச் சேர்ந்த 59 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே கைது செய்யப்பட்டு யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் எதிர்வரும் மே 10ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக