காதலாக இருந்தாலும், கல்யாணமாக இருந்தாலும் மன நிம்மதியை தரணும்-நடிகை நயன்தாரா
நடிகை நயன்தாராவின் புதிய படம் லவ் ஸ்டோரி மே 3 ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தில் காதல், கல்யாணம் குறித்தெல்லாம் பேசியிருக்கிறார் நயன்.
தெலுங்கில் நாகார்ஜுனா ஜோடியாக நயன்தாரா க்ரீக் வீருடு என்ற படத்தில் நடித்துள்ளார். கொண்டபல்லி தசரத் குமார் இயக்கம். காதலை மையமாகக் கொண்ட கதை. மீரா சோப்ரா முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்
முப்பது கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இப்படம் மே 3 ஆம் தேதி வெளியாகிறது. அதனை லவ் ஸ்டோரி என்ற பெயரில் அதே மே 3 தமிழில் வெளியிடுகிறார்கள்.
இந்தப் படத்தில் காதலாக இருந்தாலும், கல்யாணமாக இருந்தாலும் மன நிம்மதியை தரணும், அதை தராத காதல் காதலும் இல்லை, கல்யாணம் கல்யாணமும் இல்லை என்று நயன்தாரா வசனம் பேசுவது போல் காட்சி உள்ளதாம். நயன்தாராவின் நிஜ மனதை அப்படியே வசனத்தில் இறக்கி வைத்திருக்கிறாராம் இயக்குனர்.
தெலுங்குப் படம் ஒன்று ஆந்திராவில் வெளியாகும் அதே நாளில் தமிழில் வெளியாவது அபூர்வம். நடித்திருப்பது நயன்தாரா என்பதால் தயாரிப்பாளர் ரிஸ்க் எடுத்திருக்கிறார்.
0 கருத்து:
கருத்துரையிடுக