புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கட்டிய மனைவியை சாமியாருடன் கட்டாய உறவில் ஈடுபட வைத்துள்ளான் கணவன். இதனால் மனமுடைந்த அந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாள்.



மேற்கு வங்க மாநிலம் ஜபல்பூரி மாவட்டம் காமக்யாகுரி பகுதியைச் சேர்ந்தவர் சுகுமாரின் மனைவி ஸ்வப்னா(வயது 39). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஆனால் ஆண் வாரிசு வேண்டும் என்பதற்காக ஸ்வப்னாவை அவரது மாமனார், மாமியார், கணவன் மற்றும் அவரது உறவினர்கள் தினம் தினம் கொடுமைப்படுத்தியுள்ளனர். சாந்தை இணையம்இது போதாது என்று உச்சக் கட்டமாக, கடந்த டிசம்பர் மாதம் ஒரு சாமியாரை வீட்டிற்கு வரவழைத்த சுகுமார் தன் மனைவியை கட்டாயப்படுத்தி சாமியாருடன் உறவு வைக்கச் செய்துள்ளார். தொடர்ந்து 3 நாட்கள் சாமியாரின் பிடியில் சீரழிந்த ஸ்வப்னா, மனமுடைந்து போய் கடந்த17-ம் திகதி தீக்குளித்தார். பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஸ்வப்னா சிகிச்சை பலனின்றி கடந்த 28-ம் திகதி உயிரிழந்தார்.

மரணத்திற்கு முன்னதாக தனக்கு நேர்ந்த கொடுமையை தன் தாயாரிடம் கூறி அழுதார் ஸ்வப்னா. இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்வப்னாவின் தாயார் பொலிசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து, ஸ்வப்னாவின் கணவர் சுகுமார், மாமனார் சுரேன், மாமியார் ஷோபா ராணி, மைத்துனி திரவுபதி ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். சாந்தை இணையம்ஸ்வப்னாவின் சாவுக்கு மூல காரணமாக இருந்த சாமியார் தலைமறைவாகிவிட்டார். இதனையடுத்து அவரையும் பொலிசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஆண் வாரிசுக்காக கட்டிய மனைவியை சாமியாருடன் கட்டாய உறவில் ஈடுபடுத்திய சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top