புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள தியாவட்டவானில் சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு ஆளாக்க முற்பட்ட 55 வயதுடைய நபரொவருரை அப்பகுதி பொதுமக்கள் மடக்கிப் பிடித்து வாழைச்சேனை பொலிஸில் இன்று ஒப்படைத்துள்ளனர்.

குறித்த ஏழு வயதுடைய சிறுமி அப்பகுதியிலுள்ள பாடசாலைக்கு சென்று வீடு திரும்பும் வழியில் அவ்வீதியால் வந்த 55 வயதுடைய நபரொருவர் சிறுமியின் பின் பக்கம் மற்றும் கையைப் பிடித்து இழுத்துச் செல்ல முயற்சித்துள்ளார்.

குறித்த் சிறுமி கூச்சலிட்ட சத்தம் கேட்டு வீதியால் சென்ற பொதுமக்கள் இச்சம்பவத்தினை நேரில் கண்டு மேற்படி நபரைப் பிடித்து வாழைச்சேனை பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.

வாழைச்சேனை பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
Top