புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

தூத்துக்குடி மாவட்டம் காமராஜர்புரம் அருகே உள்ள ஆறுமுகநேரியைச் சேர்ந்தவர் வீரபாண்டி(55). இவர் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி லட்சுமி(50). திருமணமாகி 30 வருடங்கள் ஆன இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.


வீரபாண்டி, குடித்து விட்டு வந்து லட்சுமியிடம் அடிக்கடி தகராறு செய்தும், அவரை அடித்து துன்புறுத்தியும் வந்துள்ளார். இந்நிலையில் நேற்றும் வீரபாண்டி, குடிபோதையில் லட்சுமியிடம் தகராறு செய்துள்ளார்.

வீரபாண்டியின் துன்புறுத்தலை பொறுக்க முடியாத லட்சுமி, இன்று அதிகா‌லை வீரபாண்டியின் தலையில் அம்மிகல்லை போட்டு கொலை செய்து விட்டு தானும் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

ஆறுமுகநேரி போலீசார் லட்சுமியை கைது செய்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்
 
Top