உத்திர பிரதேசத்தில் பிரிந்து சென்ற மனைவியை மிரட்டுவதற்காக கணவன், இருவரின் படத்தை போஸ்டர் அடித்து ஒட்டியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
உத்திர பிரதேசம் மீரட் நகரைச் சேர்ந்த நீரஜ் என்ற இளைஞன் கடந்த 2009ம் ஆண்டு முதல் 22 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளான்.
சில மாதங்களுக்கு முன் இருவரும் ரகசியமாகத் திருமணமும் செய்து கொண்டுள்ளனர். அதற்குப் பிறகு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை அடுத்து, நீரஜை விட்டு அந்தப் பெண் பிரிந்துள்ளார்.
இதற்கிடையே அந்தப் பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதை அறிந்த நீரஜ், தங்கள் திருமண புகைப்படத்துடன் நோட்டீஸ் அச்சடித்து ஊர் முழுக்க ஒட்டியுள்ளான்.
இதைப் பார்த்த பெண் வீட்டார் பொலிசில் புகார் கொடுத்ததை அடுத்து, நீரஜ் கைது செய்யப்பட்டான்.