புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

11 வயதுடைய சிறுமி பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியமை தொடர்பாக சிறுமியின் தாயும், ஆசை நாயகனும், மகியங்களைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்ட சிறுமி, மகியங்கனை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறிப்பிட்ட சிறுமி பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டமை குறித்து, சிறுவர் பராமரிப்பு அதிகாரசபைக்கு செய்யப்பட்ட புகாரையடுத்து, அதிகார சபையினர் மகியங்கனைப் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பேரில், பொலிஸார் பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட 30 வயது நிரம்பிய நபரையும் அந்நபருக்கு உதவியளித்த தாயையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போது, பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட நபர் சிறுமியின் தாயாரது ஆசை நாயகன் என்பதும், சிறுமியின் தகப்பன் இறந்ததினால், தாயின் பராமரிப்பிலேயே சிறுமி இருந்து வந்ததும் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் விசாரணையின் பின்னர், மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவரென்று, மகியங்கனைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 
Top