கேரளாவில் தன் இரு மகன்களையும் 1.60 லட்சம் ரூபாய்க்கு விற்ற தந்தை கைது செய்யப்பட்டார்.
கேரளா காசர்கோட்டை சேர்ந்த கூலித் தொழிலாளி ரித்தீஷ்.
சமீபத்தில் இவரின் மனைவி, கணவர் ரித்தீஷ் தன்னை கொடுமைப்படுத்துவதாக பொலிசில் புகார் ஒன்றை தெரிவித்து இருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் ரித்தீஷை கைது செய்த பொலிசார், விசாரணை நடத்தினர்.
அப்போது, இரண்டு வாரங்களுக்கு முன் தன் இரண்டாவது மகனான ஆறு மாத குழந்தையை மங்களூரைச் சேர்ந்த ஒருவருக்கு 1 லட்சம் ரூபாய்க்கும், அதற்கு முன் முதல் மகன் எட்டு மாத குழந்தையாக இருந்த போது கர்நாடகாவின் குந்தப்புராவைச் சேர்ந்த நபருக்கு 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்றதை ஒப்புக் கொண்டார்.
இதனையடுத்து விற்கப்பட்ட குழந்தையை கண்டறியும் முயற்சியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் மனைவிக்கு தெரிந்தே குழந்தைகள் விற்கப்பட்டனவா என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.