புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பிரான்ஸ் மற்றும் இத்தாலியில் வாழ்ந்து வந்த 40 வயதான பிரதீப் தேவநாராயன என்பவரை அவருடைய கள்ள மனைவியே தனது மார்பு கச்சையால் கழுத்தை நெரித்து கொலை
செய்துள்ளார் என்று பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

பாணந்துறையில், பாடசாலை ஒன்றுக்கு அருகில் கார் ஒன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் கடந்த முதலாம் திகதி மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் 39 வயதான பெண்ணொருவர் நேற்று புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இந்த சடலம் மீட்கப்பட்டது தொடர்பில், ஒரு குழந்தையின் தாயான 39 வயது மேரஞ்ஜ ஹேவகே சஞ்ஜீவனி தேவிகா தனது சட்டத்தரணியின் மூலமாக பாணந்துறை நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார்.

சரணடைந்த பெண்மணி அவருடைய கள்ள மனைவியென்றும் தன்னுடைய மார்பு கச்சையால் கழுத்தை நெரித்தே கொலை செய்துள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதனையடுத்தே, அவரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பாணந்துறை நீதவான் ரூவீர வெலிவன்ன உத்தரவிட்டார்.

பாணந்துறையில் ஆணின் சடலம் மீட்பு
 
Top