நிர்வாண படங்களையும் வீடியோ காட்சிகளையும் இணையத்தளத்திற்கு அனுப்பப்போவதாக ஆசிரியையொருவரை அச்சுறுத்தும் விமானப்படை வீரரொருவர் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கொழும்பிலுள்ள
பாடசாலையொன்றில் கற்பிக்கும் 26 வயதான ஆசிரியையே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார்.
ஆசிரியையை பாலியல் ரீதியாக பயன்படுத்தி விட்டு அவரது நிர்வாணப்படங்களையும் வீடியோ காட்சிகளையும் இணையத்தளத்திக்கு அனுப்பப் போவதாக குறித்த படைவீரர் அந்த ஆசிரியையை எச்சரித்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த சந்தேகநபரின் தொலைபேசி அழைப்புகளை பயன்படுத்தி, அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
தான் இந்த விமானப்படை வீரருடன் அறிமுகமாகியதன் பின்னர், புறக்கோட்டையிலுள்ள ஓர் அறையில் சந்தித்து வந்ததாகவும் ஒரு சந்தர்ப்பத்தில் தன்னை நிர்ப்பந்தித்து நிர்வாணமாக வீடியோ படமெடுத்ததாகவும் இந்த ஆசிரியை தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தனக்கு ஒரு மாதத்திற்கு முன்னர் திருமணம் நடந்ததாகவும், அதன் பின்னரும் விமானப்படைவீரர் தன்னோடு வரும்படி நிர்ப்பந்திப்பதாகவும் மறுத்தால் தன்னிடமிருக்கின்ற வீடியோ மற்றும் புகைப்படங்களை இணையத்தளத்திற்கு அனுப்பப் போவதாக மிரட்டுவதாகவும் இந்த ஆசிரியை தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
பெரிதும் மனமுடைந்து போயுள்ள தன்னை இந்த இக்கட்டான நிலையிலிருந்து மீட்குமாறு அவர் பொலிஸாரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.