கொழும்பு புறநகரான பாணந்துறையில், பாடசாலைக்கு அருகில் காரிலிருந்து ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளமை தொடர்பில் 39 வயதான பெண்ணொருவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
பிரான்ஸ் மற்றும் இத்தாலியில் வாழந்து வந்த 40வயதான பிரதீப் தேவநாராயன என்பவர் இலங்கை திரும்பியிருந்த நிலையில் கடந்த 01ஆம் திகதி பாணந்துறையில் காரொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இது தொடர்பிலேயே பெண்ணொருவர் தனது சட்டத்தரணியின் மூலமாக பாணந்துறை நீதிமன்றத்தில் இன்று சரணடைந்துள்ளார்.
கங்கொடவில நுகேகொடையை வசிப்பிடமாக கொண்ட பிரதீப் தேவநாராயனின் மனைவி இத்தாலியிலிருந்து எதிர்வரும் 5ஆம் திகதி நாடு திரும்பவிருந்த நிலையிலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டார்.
அவர் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் பெண் மற்றும் அப்பெண்ணின் தாய் உட்பட ஆறுபேரிடம் பொலிஸார் விசாரணைகளை நடத்தியதுடன் வாக்குமூலங்களையும் பெற்றுள்ளனர்.
இந்நிலையிலேயே பண்டாரகம அலுபோமுல்லையை வசிப்பிடமாக கொண்ட ஒரு குழந்தையின் தாய் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.