புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள தெற்கு லேக்தாகூ பகுதியை சேர்ந்தவர் ஜேசீ துகார்டு. இவர் 11 வயதாக இருந்த போது அதாவது கடந்த 1991-ம் ஆண்டு ஜூன் 10-ந் தேதி தனது வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார்.


அப்போது அவர் அருகே ஒரு கார் வந்து நின்றது. அதில் பிலிப் காரிடோ என்ற காமுகன் இருந்தான். அவன் ஜேசீ துகார்டை முரட்டுத்தனமாக காருக்குள் இழுத்து கடத்தினான். அவரை ஒரு புறநகரில் ஊருக்கு ஒதுக்குபுறம் உள்ள தனது வீட்டின் பின்புறம் இருந்த அறையில் அடைத்து வைத்தான்.

பின்னர் அவரை 18 ஆண்டுகள் சிறை வைத்து கற்பழித்தான். இதற்கு அவனது மனைவி நான்சியும் உதவியாக இருந்தார். இந்நிலையில் ஜேசீ துகார்டு அந்த தனிமை சிறையில் 2 பெண் குழந்தைகளை பெற்றெடுத்தார். இருந்தும் அவன் ஜேசீயையும், அவரது குழந்தைகளையும் வெளிளே விடவில்லை. அடைத்து வைத்து இருந்தான்.

இந்த விவரம் எப்படியோ வெளியில் தெரிந்து விட்டது. இதை தொடர்ந்து ஜேசீயும் குழந்தைகளும் 2009-ம் ஆண்டு போலீசாரால் விடுவிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட பிலிப்துகார்டும், அவரது மனைவி நான்சியும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் பிலிப்புக்கு 43 ஆண்டு ஜெயில் தண்டனையும், அவனது மனைவி நான்சிக்கு 36 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் 11 வயதில் கடத்தப்பட்டு 18 ஆண்டுகள் சிறை வைத்து கற்பழிக்கப்பட்ட கொடுமை குறித்து ஜேசீதுகார்டு ஒரு தனியார் டெலிவிஷனுக்கு பேட்டி அளித்தார்.

மேலும், தனது சுயசரிதையை புத்தகமாக எழுதியுள்ளார். அதில் இந்த விவரம் வெளியாக உள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top