ஜேர்மனி Dortmund பகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவரின் ஸ்ரீசக்தி ஜுவலறி நகைக்கடையில் துப்பாக்கி முனையில் துணிகரக் கொள்ளை நேற்று
பகல் 1:00 மணியளவில் நடைபெற்றுள்ளது.
நகைக்கடைக்கு வந்த இருவர் கடையின் கதவைப் பூட்டாதபடி குடையினைக் கொழுவிவிட்டு கடைக்குள் இருந்த கடை உரிமையாளரின் நண்பனுக்கு இருவருள் ஒருவர் ஒருவகையான மருந்தை ஸ்பிறே அடித்துவிட்டு துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார்.
பிறகு மற்றையவர் நகைகள் இருந்த கண்ணாடி பெட்டகத்தை உடைத்து பல பெறுமதிமிக்க நகைகளைக் எடுத்துச் சென்றுள்ளனர்.
கடை உரிமையாளர் ஜேர்மனி பொலிஸில் முறைப்பாடு செய்தபோதும், களவாடப்பட்ட நகைகளை மீட்க முடியவில்லை என கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக