மனஅழுத்தம் நோய் காரணமாக நடிகை பானுப்ரியா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தவர் நடிகை பானுப்ரியா. 1983ம் ஆண்டு மெல்ல பேசுங்கள் என்ற தமிழ் படத்தின் மூலம்
சினிமாவில் தனது 17வயதில் அறிமுகமானார். தொடர்ந்து அழகன், பிரம்மா, சத்ரியன், அமரன், பங்காளி, வானமே எல்லை, மகாராசன், கோகுலம், உழவன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தனது அற்புதமான நடிப்பாலும், நடனத்தாலும் ரசிகர்களை கவர்ந்த பானுப்ரியா தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த பானுப்ரியாவுக்கு மனஅழுத்தம் நோய் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

0 கருத்து:
கருத்துரையிடுக