புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு



 இந்தியாவில் திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை 13 முறை பலாத்காரம் செய்ததாகவும், தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் சென்னை பெண் இன்ஜினியர் காதலன் மீது திடுக்கிடும் புகார் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் அடுத்த விடால் கிராமத்தை சேர்ந்தவர் தளபதி. இவரது மகள் திவ்யலட்சுமி(20). இன்ஜினியரிங் முடித்துவிட்டு சென்னையில் ஈக்காட்டுதாங்கலில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இதே நிறுவனத்தில் ஈரோடு கோட்டை நல்லான்வீதியை சேர்ந்த புஷ்பநாதன் மகன் கோகுலகண்ணன்(32) என்பவரும் பணியாற்றி வந்துள்ளார். திவ்யலட்சுமிக் கும், கோகுலகண்ணனுக்கும் இடையே காதல் மலர்ந்தது.

திவ்யலட்சுமியை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்திருந்த கோகுலகண்ணன் திடீரென அவரை விட்டு விலக ஆரம்பித்தார். இதையடுத்து சென்னையில் இருந்து காதலனை பார்க்க திவ்யலட்சுமி நேற்று முன்தினம் ஈரோடு வந்தார்.

ஆனால் கோகுலகண்ணன் காதலியை ஏற்க மறுத்ததோடு வீட்டில் இருந்து தலைமறைவானார். நேற்று முன்தினம் மகளிர் போலீசார் திவ்யலட்சுமியை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

நேற்று காலை ஈரோடு டவுன் போலீசார் திவ்யலட்சுமியிடம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து ஆர்டிஓ சுகுமார் விசாரணை நடத்தினார். விசாரணையில் திருமணம் செய்வதாக கூறி காதலித்து, கபட நாடகமாடி காதலர் என்னை ஏமாற்றிவிட்டார். கடந்த மாதம் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றேன் என்று கூறி கதறி அழுதார். இதையடுத்து திவ்யலட்சுமியை ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்க ஆர்டிஓ, போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து நேற்றிரவு ஈரோடு அரசு மருத்துவமனையில் திவ்யலட்சுமியை போலீசார் சேர்த்தனர். அங்கு பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திவ்யலட்சுமியை கோகுலகண்ணன் சந்தித்து பேசினார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது, ‘திருமணம் செய்து கொள்கிறேன் எனக் கூறி, கூறி 13 முறை என்னை பலாத்காரம் செய்துள்ளாய். வயிற்றில் வளரும் குழந்தைக்கு நீ தான் தந்தை. என்னை திருமணம் முடிக்காமல் ஏமாற்ற பார்க்கிறாய், நான் உன்னை சும்மா விட மாட்டேன்’ என ஆவேசத்துடன் திவ்யலட்சுமி கூச்சலிட்டார்.

கோகுலகண்ணனுடன் வாக்கு வாதத்தை தொடர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே, கோகுல கண்ணன் நிருபர்களிடம் கூறுகையில், ‘திவ்யலட்சுமியிடம் நான் எந்த விதத்திலும் தவறுதலாக நடக்கவில்லை. அவர் என் மீது வீண் பழி சுமத்துகிறார். அவர் கருவுற்றிருந்தால் நான் டிஎன்ஏ சோதனைக்கு தயாராக உள்ளேன்’ என்றார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top