புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மலையாள சினிமாவில் இருந்து காவலன் படத்தின் மூலம் தமிழுக்கு என்ட்ரி கொடுத்தவர் மித்ரா. விஜய் படம் என்பதால் ஆவலோடு ஓடி வந்தார். ஆனால் படத்தில் அசின்தான் முக்கிய நாயகி. நீ அவருக்கு
ப்ரண்டு
கேரக்டர்தான் என்று சொன்ன டைரக்டர் சித்திக், அதேசமயம் கடைசியில் விஜய்க்கு மனைவியாவது நீதான் என்றும் சொன்னார். இதனால் எப்படியோ கடைசியில் விஜய் என் பக்கம்தானே சேருகிறார் என்று அந்த
படத்தில் கமிட்டாகி நடித்தார். ஆனால் என்னதான் க்ளைமாக்சில் விஜய்க்கு மனைவியான போதும்,

அசினின் தோழியாக நடித்த மித்ரா என்றே கோடம்பாக்கம் மித்ராவை குறிப்பிட்டது.இதனால் அந்த தோழி இமேஜை மாற்ற வேண்டும் என்று கரண் நடித்த கந்தா படத்தில் கதாநாயகியாக நடித்தார். ஆனால் அந்த படமோ இன்னும் கிடப்பில் கிடக்கிறது. இதையடுத்து சிவாஜி பேரன்
சிவாஜிதேவ் நடிக்கும் நந்தனம் என்ற படத்தில் தற்போது நாயகியாக நடித்திருக்கும் மித்ரா, அடுத்து விஜய்யுடன் டூயட் பாடுவதே எனது குறிக்கோள் என்று கூறி வருகிறார்.

என்னைப்போலவே மலையாளத்தில் இருந்து வந்த அசின், நயன்தாரா, அமலாபால் போன்ற நடிகைகள் விஜய்யுடன் நடித்து விட்டபோது என்னால்
மட்டும் முடியாதா என்ன? முடித்துக்காட்டுகிறேன் என்று தன்னை சந்திக்கும் கோலிவுட் அன்பர்களிடம் அடித்து சொல்லி வருகிறார் அம்மணி.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top