சமீபத்தில் கேரளாவில் கோட்டயம் மற்றும் கன்னூரில் தனது மகள்களையே கெடுத்த தகப்பன்களை கைது செய்தது காவல்துறை. அதைத் தொடந்து மற்றொரு அதிர்ச்சியுறும் சம்பவம் கேரளா எர்ணாகுளத்தில் அரங்கேறியுள்ளது.
எர்ணாகுளம் மாவட்டம் குரும்பாடி என்னுமிடத்தில் 40 வயதான ஒருவன் தனது மகளுக்கு பிராந்தி கொடுத்து கடந்த 6 மாதமாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்து இருக்கிறான். இதுகுறித்து அவனது மனைவி போலீசில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து தற்போது அவன் தலைமறைவாகியுள்ளான்.
சிறுமியின் நடத்தையில் பிரச்சினை இருப்பதை அங்கம்பக்கத்தினர் முதலில் குழந்தை மருத்துவரிடமும் பின்னர் மனநல மருத்துவரிடம் கொண்டுசென்று காண்பித்து இருக்கின்றனர். தினந்தோறும் பிராந்தி கொடுத்து அப்பா என்னை பாலியல் தொந்தரவு செய்து வந்தார். மேலும் அப்பாவின் நண்பர்கள் 4, 5 பேர் சேர்ந்து என்னை தொந்தரவு செய்தனர் என்றும் அந்த சிறுமி மருத்துவரிடம் கூறியிருக்கிறாள்.
இதைப்பற்றி அவனது மனைவி கூறும்போது கணவனை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்த என்னால் இரு பெண் குழந்தைகளை வளர்க்க முடியாமல் தனது 6 வயது குழந்தையை கணவனிடம் விட்டதாக அவர் போலீசாரிடம் கூறியிருக்கிறாள்.
0 கருத்து:
கருத்துரையிடுக