3500 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு ஆபரண ஆசை இருந்தது: ஆய்வில் தகவல் தங்கத்தின் விலை கிராமுக்கு ஆயிரத்தை நெருங்கி வரும் வேளையிலும் நம்நாட்டு பெண்களுக்கு தங்க நகைகளை வாங்கி, அணிந்துக் கொள்ளும் ஆசை சற்றும்
குறைந்தபாடில்லை.
இந்த ஆபரண ஆசை, பெண்களுக்கிடையில் இன்று, நேற்று, உருவானதல்ல. கற்காலத்தின் போதே
உலோகங்களால் உருவான ஆபரணங்களை அணியும் வழக்கம் பெண்களிடம் இருந்துள்ளது என்பது
சமீபத்தில் தெரியவந்துள்ளது.
கி.பி. 21-ம் நூற்றாண்டில் வசிக்கும் நவநாகரிக மங்கையருக்கு இணையாக, கி.மு.1550-ம் ஆண்டில்
வசித்த ஜெர்மனி பெண் ஒருவரும், வெண்கலத்தால் ஆன, சுருள் சுருளான கிரீடம் போன்ற
ஆபரணத்தை அணிந்துள்ளது. தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு, கிழக்கு ஜெர்மனியில் உள்ள ரோக்லிட்ஸ் பகுதியில், புதிய ரெயில் பாதை
அமைப்பதற்காக பூமியை தோண்டியபோது, ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த எலும்புக் கூட்டின் மண்டை ஓட்டில்தான், வெண்கலத்தால் செய்யப்பட்ட, இந்த தலை
அலங்கார ஆபரணம் கிடைத்துள்ளது.
இந்த எலும்புக்கூட்டினை ஆய்வு செய்த தொல்பொருள் நிபுணர்கள், அந்த பெண் கி.மு.
1550-1250-க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடும் என்பதை உறுதி செய்துள்ளனர்.
3500 ஆண்டுகள் பழமையான இந்த அபூர்வ மண்டை ஓடு, ஜெர்மனியின் ஹாலே நகரில்
உள்ள அருங்காட்சியகத்தில், பொதுமக்கள் பார்வைக்கு இன்று வைக்கப்பட்டது.
0 கருத்து:
கருத்துரையிடுக