புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


லண்டனின் சில பகுதிகளில் கடும் பனிப் பொழிவு ஏற்பட்டதையடுத்து, நகரின் 3-வது பெரிய ஏர்போர்ட், நேற்று 3 மணி நேரம் மூடப்பட்டது. ஓடு பாதையில் பனிப்படிவுகள் ஏற்பட்டதையடுத்து, விமானங்கள் தரையிறங்க முடியாமல் மற்றைய விமான நிலையங்களுக்கு திசைதிருப்பி விடப்பட்டன.


லண்டன் ஸ்டான்ஸ்டர்ட் (Stansted) ஏர்போர்ட்டிலேயே இந்த அசாதாரண நிலை ஏற்பட்டது. லண்டனில், ஹீத்ரோ, கட்விக் ஆகிய இரு விமான நிலையங்களுக்கு அடுத்தபடியாக அளவில் பெரிய விமான நிலையம் இதுதான்.

விமான நிலையம் மூடப்பட்டதையடுத்து, அங்கிருந்து புறப்படவேண்டிய விமானங்கள் அனைத்தும் தாமதிக்கப்பட்டன, இதனால், ஏர்போர்ட் முழுவதும் பெரிய வரிசைகளில் பயணிகள் காத்திருந்தனர். அவசரகால பணியாளர்கள் வந்து பனிப்படிவுகளை அகற்றியதை அடுத்து, 3 மணி நேரத்தின்பின் விமான நிலையம் திறக்கப்பட்டது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top