நாராஹேன்பிட்டிய பிரதேசத்தில் 14 ஆமைகளுடன் சீன நாட்டுப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாராஹேன்பிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட தேடுதலின் போது இச்சதேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இப்பிரதேசத்திலுள்ள வாடி வீடு ஒன்றின் சிறிய அறையில் 14 ஆமைகளும் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சீன பிரஜை மாலிகாவத்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வேளை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்ட ஆமைகளை தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் ஒப்படைக்கும்படி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக