சுவிஸ்சர்லாந்தின் தலைநகர் சூரிசில் உள்ள இலங்கையரின் உணவு விடுதிக்கு சேதம் ஏற்படுத்தி உரிமையாளரையும் தாக்கிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் மது போதையில் உணவு விடுதியையும் உரிமையாளரையும் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
4,700 பேர் வசிக்கும் சூரிசில் உள்ள பிரதேசம் ஒன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்த தாக்குதலின் போது உணவு விடுதியின் உரிமையாளரான இலங்கையர் சிறு காயங்களிற்கு உட்பட்டதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட இலங்கையர் 34 வயதான இப்ராஹிம் என அந்நாட்டு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதலின் பின்னர் அவர்கள் அடுத்தமுறை கொலை செய்வோம் என உணவு விடுதி உரிமையாளருக்கு கூறிச் சென்றுள்ளனர்.
தாக்குதலை மேற்கொண்டவர்கள் சூரிச், பேர்ன் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அந்நாட்டு பொலிஸ் தெரிவித்துள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக