புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அரியானா மாநிலம், ஹிசார் மாவட்டத்தில் உள்ள பர்வாலா பொலிஸ் நிலையத்தில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவி சமீபத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.


அப்புகாரில் அவர் கூறியிருந்ததாவது...

கடந்த நவம்பர் மாதம், வயல்வெளி வழியாக நடந்து வந்துக்கொண்டிருந்த என்னை, பிரதீப், பாரு, கோலியா ஆகியோர் வழிமறித்து, கத்தி முனையில் பாலியல் பலாத்காரம் செய்தனர்.

அந்த கற்பழிப்பு காட்சியை செல்போனில் ஒருவன் படம் பிடித்தான். சில நாட்களுக்கு பிறகு அந்த காட்சியை தனது செல்போனில் காட்டி மிரட்டிய குல்தீப் என்பவனும் பலவந்தமாக என்னை பலாத்காரம் செய்தான்.

சில நாட்களுக்குப் பிறகு மங்கே ராம் என்பவனுடன் என் வீட்டுக்கு யாருமில்லாத நேரத்தில் வந்த குல்தீப், அவனுடன் சேர்ந்து என்னை மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்தான். இவர்கள் 5 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அப்புகாரில் மாணவி கூறியிருந்தார்.

மருத்துவ பரிசோதனையில் அவர் பலமுறை பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டமை உறுதி செய்யப்பட்டதால், குற்றம்சாட்டப்பட்ட 5 பேரையும் பொலிசார் நேற்று கைது செய்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top